என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏடிஎம் கொள்ளை முயற்சி"
- ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.
- வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.
இன்று காலையில் ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது.
மேலும் அதிலிருந்து எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனை கண்டு வாடிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது பற்றி கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் இன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகள் இருப்பது அதில் பதிவாகி இருந்தது.
எச்சரிக்கை அலார சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அந்த காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பொத்தூர் பகுதியில் வங்கி செயல்பட்டு வருகிறது.
- ஏ.டி.எம். எந்திரத்தில் மர்ம நபர்கள் அதிகாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆவடி:
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பொத்தூர் பகுதியில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் கீழ் தளத்தில் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது.
இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் மர்ம நபர்கள் அதிகாலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வந்த ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம்.மை உடைத்துக் கொண்டிருந்தார். அவரை கைது செய்தனர்.
அவர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த எட்வின் என்பது தெரியவந்தது.
- சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது.
- வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் அருகே உள்ள திம்மராஜம் பேட்டையில் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஏ.டி.எம்.மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்தனர்.
அந்த நேரத்தில் அவ்வழியே ரோந்து போலீசார் வந்தனர். உடனே கொள்ளைகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம்.மையத்துக்குள் சென்று பார்த்தபோது எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியட் சீசர் மற்றும் போலீசார்விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
சரியான நேரத்தில் ரோந்து போலீசார் வந்ததால் ஏ.டி.எம்.மையத்தில் இருந்த பணம் தப்பியது. கொள்ளைகும்பலை பிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த ஏ.டி.எம். கொள்ளை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாலாஜாபாத் அருகே மீண்டும் ஏ.டி.எம். எந்திரத்தை மர்மகும்பல் உடைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 3 மர்ம நபர்கள், கடப்பாறையால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர்.
- போலீசாரை கண்ட அந்த மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த சந்தைப்பேட்டையில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவர் செங்கல் சூளை தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் கடந்த ஓராண்டாக, ஏ.டி.எம். எந்திரம் வைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீவட்டிபட்டியில் இருந்து சந்தைப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வெங்கடேஷ் வீட்டின் அருகே வைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் அருகே இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு 3 மர்ம நபர்கள், கடப்பாறையால் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர். இதை ரோந்து போலீசார் பார்த்துள்ளனர்.
இதேபோல் போலீசாரை கண்ட அந்த மர்ம நபர்கள், இருசக்கர வாகனத்தில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தப்பிச் சென்றவர்களில் ஒரு நபர், தீவட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் நின்று போனில் பேசிக் கொண்டிருந்தான். அவனை மடக்கிப் பிடித்த தீவட்டிப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே இருசக்கர வாகனத்தில் தப்பிய மற்ற 2 நபர்கள் சேலத்தில் பிடிபட்டனர். அவர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏடிஎம் மையத்திற்குள் இருந்து 2 நபர்கள் வெளியே ஓடினார்கள். அவர்களை அப்பகுதியை மக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
- பின்னர் உள்ளே சென்று பார்த்த அப்பகுதி மக்கள் ஏடிஎம் எந்திரம் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி ஆஞ்சநேயர் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை ஏடிஎம் எந்திரத்தை உடைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற பொது மக்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது ஏடிஎம் மையத்திற்குள் இருந்து 2 நபர்கள் வெளியே ஓடினார்கள். அவர்களை அப்பகுதியை மக்கள் பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த அப்பகுதி மக்கள் ஏடிஎம் எந்திரம் உடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். இதில் ஏடிஎம் எந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பஸ் நிலையம் அருகே மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
இந்த ஏ.டி.எம். பிரதான சாலையில் இருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து பணம் எடுத்து செல்வார்கள். இதனால் இந்த ஏ.டி.எம்.மில் தினமும் ரூ.10 லட்சம் வரை நிரப்பப்படும்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு ஒரு மர்மநபர் வந்துள்ளார்.
அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தின் கீழ் பகுதியை அந்த நபர் உடைத்தபோது அலாரம் ஒலித்தது. இதனால் அச்சம் அடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த நிலையில் அந்த வழியாக நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகனத்தில் வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்து கொண்டிருந்ததால் சந்தேகத்தின்பேரில் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர்.
கொள்ளை முயற்சி நடந்ததை அறிந்த அவர்கள், அதுபற்றி மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறித்து வங்கி தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்று விசாரணை நடத்துகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை கண்டுபிடிப்பதற்காக ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது அலாரம் அடித்ததால் பணத்தை கொள்ளையடிக்க வந்த மர்மநபர் சிக்கி விடுவோம் என்று அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.
பிரதான சாலையில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் வேடப்பட்டியில் அடகு கடை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 வாலிபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தபோது சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.
இது குறித்து நகர் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூத் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
சுடுகாடு அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் விசாரித்ததில் 2 பேரும் ஏ.டி.எம். மையம் மற்றும் அடகு கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் என்பது தெரிய வந்தது.
அந்த வாலிபர்கள் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 20), வேடப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியதீபக் (17) என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை கைது செய்து வேறு ஏதும் கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் தெருவில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பள்ளிகொண்டா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வாலிபர் ஒருவர் கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்தார். ஏ.டி.எம். மையம் அருகே போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதனையடுத்து போலீசார், வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் நந்தா என்கிற முத்துக்குமார் (வயது 22) என்பதும், செங்கல்சூளை வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அருகே உள்ள வள்ளுவர் நகர் மணலி சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை.
நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா வயரை துண்டித்தனர்.
பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தை கடப்பாறையால் உடைக்க முயன்றனர். எந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இன்று காலை ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாடிக்கையாளர்கள் எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று மாலை தான் ஊழியர்கள் பணம் நிரப்பி சென்று இருக்கிறார்கள். கொள்ளையர்களால் எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் இருந்த பல லட்சம் தப்பியது.
கண்காணிப்பு கேமிராவின் வயரை துண்டிப்பதற்கு முன்பு மர்ம நபர்கள் ஏ.டி.எம். மையத்துக்குள் புகும் காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்தில் கடந்த ஆண்டு கொள்ளை முயற்சி நடந்தது. அடுத்தடுத்து ஏ.டி.எம். மையத்தை மர்மகும்பல் குறி வைப்பது வங்கி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் 2- வது வீதியில் தனியார் பனியன் கம்பெனி வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
இந்த ஏ.டிஎம். பகுதியில் நேற்று நள்ளிரவு வாலிபர் ஒருவர் சுற்றி கொண்டு இருந்தார். அவரது கையில் ஆயுதம் இருந்தது. அவர் ஏ.டி.எம்.மிற்குள் நுழைவதும் பின்னர் வெளியில் வருவதுமாக இருந்தார். சுமார் அரை மணி நேரம் அங்கு சுற்றி கொண்டு இருந்தார். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் சுற்றி வந்தது தெரிய வந்தது.
இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்தில் பதிவானது.
இதனை பார்த்த மும்பை அதிகாரிகள் ஏ.டி.எம்.மில் பணத்தை கொள்ளையடிக்க தான் வாலிபர் சுற்றி திரிகிறார் என நினைத்தனர். அவர்கள் திருப்பூர் மாநகர போலீசுக்கும், திருப்பூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் திருப்பூர் போலீசாருக்கு எந்த ஏ.டி.எம். என உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் போராடிய பின்னர் தான் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையம் என்பது தெரிய வந்தது.
அங்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம்.மில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் வாலிபர் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமான காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து அந்த வாலிபர் யார் என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் வேறு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? அதிலும் இந்த வாலிபர் உருவம் பதிவாகி இருக்கிறதா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏ.டி.எம்.எந்திரத்தை உடைக்க வாலிபர் சுற்றி வந்ததை மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து சரியான நேரத்தில் கண்டுபிடித்து விட்டதால் ஏ.டி.எம்.மில் இருந்த பணம் தப்பியது.
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மை வாலிபர் உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ATMrobberytry
சென்னை கோடம்பாக்கம் வெள்ளாளதெரு ஆற்காடு சாலையையொட்டி ஆக்சிஸ் வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இந்த மையத்தில் நேற்று நள்ளிரவு மர்ம கும்பல் உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது. ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை வெளியே எடுக்க அவர்கள் முயற்சி செய்தனர்.
நீண்ட நேரமாக அவர்கள் போராடியும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. கொள்ளையடிக்கும் முயற்சி தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
இன்று காலையில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்திற்கு சென்றபோது கொள்ளையர்கள் பணத்தை எடுக்க முயன்றது தெரிய வந்தது. ஏ.டி.எம். எந்திரத்தின் பகுதி சேதம் அடைந்திருந்தது.
இதுகுறித்து வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஏ.டி.எம். மையத்தை சோதனை செய்தனர். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏ.டி.எம். எந்திரத்தில் பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. ஆனால் கொள்ளையர்களால் அதில் இருந்த பணத்தை எடுக்க முடியவில்லை.
கொள்ளையர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால் அங்கு இருந்த கேமரா மற்றும் அதில் பதிவாகும் சாதனங்களை தூக்கி சென்றுள்ளனர். கேமரா மூலம் தங்களின் உருவம் அந்த கருவியில் பதிவாகி விடும் என்பதால் இரண்டையும் திட்டமிட்டு தூக்கி சென்றுள்ளனர்.
இதனால் கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். எந்திரத்தை மீண்டும் பராமரித்து சரி செய்த பிறகுதான் பயன்படுத்த முடியும். மேலும் அதில் பதிவாகி இருந்த கைரேகை தடயங்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். இதனால் அந்த ஏ.டி.எம். இன்று மூடப்பட்டு இருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்